Announcement:
No announcements at the moment
Quick Access

Department of Tamil

தமிழ்த்துறையின் செயற்பாடு/ஆக்கம்

தன் பணியைச் செம்மையுறச் செய்து வரும் தமிழ்த்துறை ஆண்டுதோறும் பல தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்குகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் பலவகைப் பயிற்சிகளையும் தொடர்ந்து வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் முன்னேற்றத்தோடு சமூகத்தின் மீதான பொறுப்புணர்விலும், பண்பாட்டு நிகழ்வுகளிலும் தமிழ்த்துறையினரின் பங்கு தனித்துவமானதாகும். ஆகச் சிறந்த ஆளுமையான பேராசிரியர்களைக் கொண்டு விளங்கும் தமிழ்த்துறை, கல்லூரியின் அனைத்து நிகழ்வுகளிலும் தன்னை முன்னிலைப்படுத்திச் சிறப்புடன் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைக்கேற்ப பேராசிரியர்கள் அனைவரும் உரிய தகுதியோடு இருப்பது சிறப்பு. மேலும் தமிழ் ஆய்வில் சிறந்தொரு முன்னெடுப்புகளை மேற்கொண்டு, தமிழ்த்துறையானது தமிழ் உயராய்வுத் துறையாக மிளிர்கிறது. முனைவர் பட்ட ஆய்வுகளைத் திறம்பட நிகழ்த்தி ஆய்வுத்துறையில் தமிழின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொணர்வது மற்றுமொரு மணிமகுடமாகும்.

குறிக்கோள்/நோக்கம்

தமிழியல் கல்வியைப் புதுமையாக்கி முத்தமிழ் எனும் பரிமாணங்களைக் கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த நிகழ்வுகளின் மூலம் ஊக்கப்படுத்துதல். பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயார்ப்படுத்துதல்.

உள்/வெளிநாடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆளுமையையும் ஆற்றலையும் பயிற்றுவித்தலே எமது இலக்காகும். செம்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்புகளை உலகளாவிய தமிழ் இலக்கியங்களோடு, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் பொருண்மையில் மாணவர்களுக்குக் கற்பித்தல்வழி சிறந்த சமுதாயத்தை மேம்படுத்தி அறிவினையும் தமிழர் பண்பாட்டையும் விரிவு செய்வதே எமது நோக்கமாகும்.